மலை குலைந்தாலும் நிலை குலையாமல் மாண்போடு இருக்கின்ற ஓபிஎஸ். நான்கு பக்கங்களில் இருந்து அம்புகல் வந்தாலும் தன்னுடைய புன்னகையால் அதை சிதறடிக்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றவர்.
கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. தொண்டர்களை மதிக்காதவன் அழிந்து போவான். நிச்சயமாக இதற்கு தர்மம் பதில் சொல்லும் என வைத்தியலிங்கம் ஆவேசமாக பேசியுள்ளார்.
எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51ஆம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, பேசிய வைத்தியலிங்கம்;- 1000 எடப்பாடி பழனிசாமி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் இல்லை. அதிமுக கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களை மதிக்காதவன் அழிந்து போவான். நிச்சயமாக இதற்கு தர்மம் பதில் சொல்லும்.
இதையும் படிங்க;- ஜெயக்குமார் ஒரு லூசு.. என்னை பார்த்து இப்படி சொல்றாரு.. எடப்பாடியும் எம்.ஜி.ஆரும் ஒன்றா? ஓபிஎஸ் ஆவேசம்..!
மலை குலைந்தாலும் நிலை குலையாமல் மாண்போடு இருக்கின்ற ஓபிஎஸ். நான்கு பக்கங்களில் இருந்து அம்புகல் வந்தாலும் தன்னுடைய புன்னகையால் அதை சிதறடிக்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றவர். பொறுமைக்கு எடுத்து காட்டு. ஜெயலலிதா அம்மா சொன்னார்கள் ஒரு பொறுப்பை ஒருவரிடம் கொடுத்துவிட்டால் திருப்பிக் கொடுத்த வரலாறு இல்லை. அதை திருப்பிக் கொடுத்தவர் எனது சகோதரர் பன்னீர்செல்வம் என ஜெயலலிதா சொன்னார். ஒருமுறை அல்ல மூன்று முறை கொடுத்த முதலமைச்சர் பதவியை திருப்பிக் கொடுத்த பரதன் ஓபிஎஸ் தான்.
இதையும் படிங்க;- மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்..!
காலில் விழுந்து முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியின் திமீரை தொண்டர்களான நீங்கள் தான் அடக்க வேண்டும். புரட்சி தலைவருக்கும், புரட்சி தலைவிக்கு யார் ஒருவர் துரோகம் செய்தாலும் நிச்சயமாக ஒன்றரை கோடி கழக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி கட்டி காத்த விதியை காலில் மிதித்த எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டு இருக்கிறார். கொடநாடு கொள்ளை நடந்த நாள் ஏப்ரல் 24 ம் தேதியான இன்று. அந்த நாளில் இந்த மாநாடு நடக்கிறது. குற்றவாளி யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் இறைவன் தண்டிப்பான். அதிமுகவில் எல்லோரையும் அரவணைத்து புன்னகையால் தன்னுடைய ஈகை குணத்தால் கட்டி காத்து வருகின்ற ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் என கூறினார்.