
கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆட்சியை பிடிக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இந்த சூழலில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், கோவா முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணியில் தேர்தலைச் சந்திக்கிறது. கோவாவில் இம்முறை திரிணாமுல் காங்கிரஸ், மகாராஸ்டிரவாடி கோமந்த் கட்சியுடன் கோவாவில் களம் காண்கிறது. மேலும், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது. பலமுனைப் போட்டி நிலவுவதால் இம்முறை பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக- 13 முதல் 17 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 13 முதல் 17
ஆம் ஆத்மி கூட்டணி - 2 முதல் 6
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 2 முதல் 4
என்.டி.டி.வி கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பா.ஜ.க- 16 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 16 இடங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 2 இடங்கள்
நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக- 17 முதல் 19 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 11 முதல் 13 இடங்கள்
ஆம் ஆத்மி - 1 முதல் 4 இடங்கள்
மற்றவர்கள் - 2 முதல் 7 இடங்கள்
வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக- 14
காங்கிரஸ் கூட்டணி - 16
ஆம் ஆத்மி கூட்டணி - 4
மற்றவர்கள் - 6
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக- 14
காங்கிரஸ் கூட்டணி - 16
ஆம் ஆத்மி கூட்டணி - 4
மற்றவர்கள் - 6
சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக- 13 முதல் 17 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 12 முதல் 16 இடங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 5 முதல் 9 இடங்கள்
மற்றவர்கள் - 0 முதல் 2 இடங்கள்
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக- 14 முதல் 18 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 15 முதல் 20 இடங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 2 முதல் 5 இடங்கள்
மற்றவர்கள் - 0 முதல் 4 இடங்கள்