தமிழகம் வரும் பிரதமர்..! சமூக வலை தளத்தில் டிரெண்டாகும் கோ பேக் மோடி...! வெல்கம் மோடி..!

Published : Nov 11, 2022, 10:52 AM ISTUpdated : Nov 11, 2022, 10:55 AM IST
தமிழகம் வரும் பிரதமர்..! சமூக வலை தளத்தில் டிரெண்டாகும் கோ பேக் மோடி...! வெல்கம் மோடி..!

சுருக்கம்

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோ பேக் மோடி என்ற பதிவும், வரவேற்க்கும் வகையில் வெல்கம் மோடி என்ற பதிவும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழகம் வரும் மோடி

தென் மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுபயணத்திற்கு திட்டமிட்ட பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கேற்றுள்ளார். அப்போது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் மோடி, திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக் கழகத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதற்காக காந்தி கிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் தமிழகத்தில் தற்போது கன மழை பெய்து வருவதால் சாலை மார்க்கமாக செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்க்காக மதுரை முதல் திண்டுக்கல் வரை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்..

டுவிட்டரில் டிரெண்டாகும் மோடி

இதனிடையே பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக ஐடி விங் மற்றும் எதிர்கட்சிகள் கோ பேக் மோடி என்ற வாசகத்தை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர்  வெல்கம் மோடி என்ற வாசகத்தில் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் கோ பேக் மோடி மற்றும் வெல்கம் மோடி என்ற வாசகம் டிரெண்டாகிய நிலையில் தற்போது வெல்கம் மோடி என்ற வாசகம் தற்போது டிரெண்டிங்கில் பின் தங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக..! வாக்குச்சாவடி முகவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!