மத்திய அமைச்சராகிறார் ஜி.கே.வாசன்..? சீட் கொடுத்த அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தமாகா..!

Published : Mar 10, 2020, 12:28 PM ISTUpdated : Mar 26, 2020, 01:56 PM IST
மத்திய அமைச்சராகிறார் ஜி.கே.வாசன்..? சீட் கொடுத்த அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தமாகா..!

சுருக்கம்

எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ள ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது.அதிமுகவில் எம்.பி. பதவியை பிடிக்க மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஒரு மாநிலங்களவை பதவியை வழங்க வேண்டும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது.

இதையும் படிங்க;- பிரேமலதா ஏமாற்றம்... பாஜக மிரட்டலுக்கு பணிந்து ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கிய எடப்பாடி..!

அதேபோல், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் மாநிலங்களவை சீட் கேட்கிறார். அவருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்க பாஜகவும் அதிமுக தலைமையிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இது குறித்து முரளிதரராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இது குறித்து பேசியதாகவும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. மேலும், எங்களுக்கு மாநிலங்களவை சீட் வழங்கினால் மத்திய அமைச்சராகிவிடுவோம் என்று முரளிதரராவ் எடுத்துரைத்துள்ளார். பெரும் நெருக்கடிகளுக்கு இடையே அதிமுக தலைமை வேட்பாளர்களை அறிவித்தது. 

இதையும் படிங்க;- என் தாலி பாக்கியம் விஜயகாந்துக்கு நிச்சயம் அதை நடத்திக்காட்டும்.. சென்டிமென்ட்டாக பேசி கலங்கடித்த பிரேமலதா..!

அதில், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ள ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர்களின் முழு ஆதரவு இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எம்.பி.யானால் மத்திய அமைச்சராவது உறுதி மற்றும் முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் 2 முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து உள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி