தமிழகத்தை நெருங்கும் கொரோனா... தடுக்க ராமதாஸ் கொடுக்கும் ஐடியா..!

Published : Mar 10, 2020, 11:43 AM IST
தமிழகத்தை நெருங்கும் கொரோனா... தடுக்க ராமதாஸ் கொடுக்கும் ஐடியா..!

சுருக்கம்

மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’’கேரளத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பறவைக் காய்ச்சலும் பரவி வருவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். 

 கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஊடகங்கள் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம். கொரோனாவுக்கான மருத்துவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாமல், பரப்பாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த  செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!
இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!