பிஜேபியுடன், த.மா.கா.,வை இணைக்கும் பேச்சு வார்த்தை? அவசர அவசரமாக டெல்லிக்கு சென்ற ஜிகே வாசன்...

By sathish kFirst Published May 9, 2019, 10:31 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின், பிஜேபியுடன், த.மா.கா.,வை இணைக்கும் பேச்சு நடந்து வருவதாகவும், அதனால் பேச்சுவார்த்தைக்காக ஜிகே வாசன் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின், பிஜேபியுடன், த.மா.கா.,வை இணைக்கும் பேச்சு நடந்து வருவதாகவும், அதனால் பேச்சுவார்த்தைக்காக ஜிகே வாசன் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலர், 2 முறை ராஜ்யசபா எம்.பி,  இரண்டு முறை மத்திய அமைச்சர், என பல பதவிகளை வகித்த வந்தார் வாசன். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராகுலுக்கும், வாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால், காங்கிரசை விட்டு விலகிய வாசன், மீண்டும் தனது தந்தை நடத்திவந்த அதே த.மா.காவை புதுப்பித்தார்.

முதல் கட்டமாக 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் எவ்வளவோ குட்டிக்கரணம் அடித்தும் அதிமுக - திமுக ஆகிய இரு கூட்டணியில் இடம் கிடைக்காமல், மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தார் ஆனால் அந்த கூட்டணியே ஒட்டுமொத்தமாக  படுதோல்வியை சந்தித்தது. த.மா.கா., என்ற கட்சியை, வாசனின் தந்தை மூப்பனார் துவங்கிய போது, இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த, பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.டி.நெடுஞ்செழியன், விஸ்வநாதன், ராணி, சாருபாலா, மகேஸ்வரி போன்ற பல முக்கிய தலைகள் வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தஞ்சாவூர் தொகுதியில், சுயேச்சை சின்னத்தில், தமாகா, போட்டியிட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றால், மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும், தனக்கு ராஜ்யசபா எம்பி பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் தரும் கட்சிக்கு ஆதரவு அளிக்கவும், அந்த கட்சியுடன், த.மா.காவை இணைக்கவும், வாசன் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் துவக்கமாக, பிஜேபி  தலைமையுடன், வாசன் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது. இரு தினங்களுக்கு முன், அரவக்குறிச்சியில் பிரசாரத்தை முடித்து, டெல்லிக்கு சென்ற வாசன், அங்கு, பிஜேபி முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. 

click me!