
தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், அரசு ஊழியர்களின் 7 வது ஊதிய குழு பரிந்துரை குறித்தும் மதுபானக்கடைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது, 7 வது ஊதியகுழு பரிந்துரைக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மதுபானங்களின் விலையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.
காரணம் தமிழகத்தில் ஏராளமான மதுபான கடைகள் மூடப்பட்டதன் விளைவாக வருவாய் குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூட தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதையடுத்து மனித உயிர் முக்கியமா? வருவாய் முக்கியமா? என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.