அவனுங்களுக்கு மரண தண்டனை தாருங்கள்... வயிறிரியும் வைகோ..!

Published : Nov 22, 2021, 11:27 AM IST
அவனுங்களுக்கு மரண தண்டனை தாருங்கள்... வயிறிரியும் வைகோ..!

சுருக்கம்

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட செய்தி, அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கின்றது.


சிறப்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளித்தாளும் குற்றவாளிகளுக்கு மரதண்டனை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட செய்தி, அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கின்றது. நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இரவுக் காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடிச் சென்றவர்களைப் பின் தொடர்ந்து, 15 கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்றார் என்பது, அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் காட்டுகின்றது.

அவரது உடல், உரிய சிறப்புகளுடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது. குற்றத் தொடர்பு உடைய 4 பேர்களைக் காவல் துறையினர் பிடித்து இருக்கின்றார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்’’ என அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?