பாலியல் வீடியோ விவகாரம்... தங்க தமிழ்செல்வனுக்கும் சிக்கல்... ஆடிப்போய் கிடக்கும் டி.டி.வி., அணி..!

Published : Apr 11, 2019, 10:56 AM ISTUpdated : Apr 11, 2019, 10:57 AM IST
பாலியல் வீடியோ விவகாரம்... தங்க தமிழ்செல்வனுக்கும் சிக்கல்... ஆடிப்போய் கிடக்கும் டி.டி.வி., அணி..!

சுருக்கம்

அமமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது கதிர் காமு பாலியல் விவகாரம். இந்த வழக்கில் தங்க.தமிழ்செல்வனையும் கோர்த்து விட்டு அணுகுண்டை தூக்கிப்போட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.   

அமமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது கதிர் காமு பாலியல் விவகாரம். இந்த வழக்கில் தங்க.தமிழ்செல்வனையும் கோர்த்து விட்டு அணுகுண்டை தூக்கிப்போட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். 

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது ஏப்ரல் 8ஆம் தேதி அதே தொகுதியைச் சேர்ந்த சருத்துப்பட்டியை சேர்ந்த 36 வயது பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது கொலை மிரட்டல், கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் இப்போது மீண்டும் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி உள்ளது.  கதிர்காமு மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தங்கதமிழ்செல்வனும் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாக எஃப்.ஐ.ஆரில் அந்த பெண் கூறியுள்ளார்.  கதிர்காமு மீது அளிக்கப்பட்ட புகாரின் முதல் தகவல் அறிக்கையில், ’கடந்த 2015ஆம் ஆண்டு தனது தந்தையின் சிகிச்சைக்காக தேனி அல்லிநகரத்தில் இருக்கும் கதிர்காமுவின் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி உடலுறவு கொண்டார்.

அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டினார். பலமுறை உடலுறவு கொண்டார். அதன் பின்னர் சம்பந்தபட்ட புகைப்படம், வீடியோவை தரும்படி கேட்டதற்கு தேனியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தால் தருவதாக கதிர்காமு கூறினார். அங்கு சென்று கேட்டபோது அதிமுகவை சேர்ந்த 3 பேர் இருந்தனர். அப்போது தங்க தமிழ்செல்வன் என்னை மிரட்டி கதிர் காமுவின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு மிரட்டினார்’’ என அந்தப்பெண் புகார் கூறியுள்ளார். அமமுகவை சேர்ந்த கதிர்காமு மீது வெளியாகியுள்ள பாலியல் புகாரில் தங்க தமிழ்செல்வன் பெயரும் தன்னை மிரட்டியதாக கூறப்பட்டிருப்பதால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் எனக் கருதப்படுகிறது. 

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தங்க. தமிழ்செலவன் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத்துக்கு கடும் போட்டியாக உள்ள நிலையில் அவர் பெயரும் அடிபட்டுள்ளதால் இதைல் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!