வீண் போகாத நம்பிக்கை... திருவண்ணாமலையில் கிரிவலம்... வேண்டுதலை நிறைவேற்ற கிளம்பிய துர்கா ஸ்டாலின்..!

Published : Aug 23, 2021, 04:05 PM IST
வீண் போகாத நம்பிக்கை... திருவண்ணாமலையில் கிரிவலம்... வேண்டுதலை நிறைவேற்ற கிளம்பிய துர்கா ஸ்டாலின்..!

சுருக்கம்

மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என பல்வேறு கோயில்களுக்கு சென்று பிராத்தனை செய்து வந்தார் துர்கா ஸ்டாலின். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை சபரீசன் உள்ளிட்டோர் சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்த ஸ்டாலின், கடவுள் நம்பிக்கையற்றவர் என்றாலும், துர்கா அதீத கடவுள் பக்தி கொண்டவர். அவரது செயல்பாடுகளுக்கு ஸ்டாலின் தடை விதிப்பதில்லை. மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என பல்வேறு கோயில்களுக்கு சென்று பிராத்தனை செய்து வந்தார் துர்கா ஸ்டாலின். அவரது வேண்டுதல்கள் வீண் போகவில்லை. முதல்வராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின். அதன்பிறகு கொரா 2ம் அலை பரவலால் துர்கா ஸ்டாலினால் கோயில்களுக்கு செல்ல இயலவில்லை.

 

இந்நிலையில் திருவண்ணாமலை சென்ற அவர் கிரிவலம் வந்து வணங்கினார். தன்னுடைய கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற நேர்த்திக்கடன் நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்திருக்கும் துர்கா ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்ற உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!