#BREAKING அனுபவம் இல்லாத ஒருத்தரை எப்படி நியமிக்க முடியும்.. கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை..!

By vinoth kumarFirst Published Apr 9, 2021, 1:01 PM IST
Highlights

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. 

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. 

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கிரிஜா வைத்தியநாதனுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் போதிய அனுபவம் இல்லை என்றும் அவருடைய நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கிரிஜா வைத்தியநாதன் பல பதவிகளில் அனுபவம் இருந்தாலும் சுற்றுச்சூழல் துறையில் போதிய அனுபவம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இதனையடுத்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

click me!