பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடிய அண்ணாமலை! பஞ்ச் டயலாக்கெல்லாம் காமெடியாகிறது.! கலாய்க்கும் காயத்ரி ரகுராம்

By Ajmal KhanFirst Published Feb 2, 2023, 1:03 PM IST
Highlights

இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி என பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக-பாஜக மோதல்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்தநிலையில் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட திட்டமிட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர்கள் சென்றனர். ஆனால் பாஜகவோ ஆலோசித்து விட்டு சொல்வதாக தெரிவித்தது. இதற்காக வேட்பாளரை அறிவிக்காமல் எடப்பாடி அணியினர் காத்திருந்தனர். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கூட்டணியினர் பெயரை மாற்றியும் பாஜக தலைவர்களின் படங்களை நீக்கியும் அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

டெல்லிக்கு சென்ற அண்ணாமலை

இந்தநிலையில் நேற்று மாலை திடீரென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளிக்க சென்றுள்ளதாக தகவல் வெளியானது. இதனை விமர்சிக்கும் வகையில் பாஜக முன்னாள் நிர்வாகியும், நடிக்கையுமான காயத்ரி ரகுராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின்றி இபிஎஸ் அதிமுக போட்டியிடுகிறது. பாஜகவிடம் கேட்காமல் வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ். சில தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் வெறும் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமே கொடுக்கிறார், ஐ.பி.எஸ். அது காமெடி மாறி வருகிறது. 

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின்றி இபிஎஸ் அதிமுக போட்டியிடுகிறது.
பாஜகவிடம் கேட்காமல் வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ்.
சில தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் வெறும் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமே கொடுக்கிறார், ஐ.பி.எஸ். அது காமெடி மாறி வருகிறது. 1/3

— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram)

 

அண்ணாமலையின் பஞ்ச் டயலாக்

2024தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும் என்பது முதல் பஞ்ச் டயலாக். 25இடங்களில் வெற்றி பெறுவார் என்பது இரண்டாவது பஞ்ச் டயலாக். ஈரோடு இடைத்தேர்தல் மூலம் கூட்டணி கட்சி என்ன செய்ய முடியும் என்று காட்டிய பிறகு, இப்போது பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடிப்போன ஐ.பி.எஸ்.இப்பவே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

click me!