காயத்ரி ரகுராம் கலாய்த்துப்போட்ட மு.க.ஸ்டாலினின் ஒற்றை போட்டோ... குமுறும் உடன்பிறப்புகள்..!

Published : Nov 10, 2021, 02:36 PM IST
காயத்ரி ரகுராம் கலாய்த்துப்போட்ட மு.க.ஸ்டாலினின் ஒற்றை போட்டோ... குமுறும் உடன்பிறப்புகள்..!

சுருக்கம்

'இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே..’

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே மிதக்கிறது. 

கனமழையினால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணியார்கள் மீட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இதுஒருபுறமிருக்க, அரசியல் கட்சியினர் இதனை வைத்து சேவை செய்வது போல  அரசியல் நடத்தி வருகின்றனர். வடசென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர் கொளத்தூர் வில்லிவாக்கம், போரூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு உணவு வழங்கி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

பாஜக தலைவர் அண்ணாமலை செல்லும் இடங்களிலும் அவர் பொதுமக்களிடம் கலந்துரையாடும் புகைப்படங்களும், வீடியோகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை எதிர்கட்சியான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேபோல் அண்ணாமலையின் புகைப்படங்களும், வீடியோக்களும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பார்வையிடும் புகைப்படம் ஒன்றை தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 'இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே..’ என கேப்சனுடன் பகிரப்பட்டுள்ள அந்த புகைப்படம், மழை வெள்ள பாதிப்பை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தபடியே வருகிறார்.. அப்போது அங்கிருக்கும் வீடுகளில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு, கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டிற்குள் இருந்தபடியே அந்தந்த வீட்டினர் முதல்வருக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள். முதல்வரும் மக்களை கண்டும் காணாதபடி பதிலுக்கு வணக்கம் சொல்லி நடந்து செல்கிறார். அத்துடன் வீட்டின் முன்பு கட்டப்பட்ட அந்த கயிறை சிவப்பு கலரில் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி உள்ளார்.

காயத்ரி ரகுராம் பதிவிற்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காயத்ரிக்கு ஆதரவாகவும், அண்ணாமலை படகில் சென்றதை பதிவிட்டு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கலவையான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

வாரிசு அரசியல் என்று ஒப்பாரி வைத்தவர்களே எங்கள் கலைஞரின் வாரிசுகள் இங்கே எங்கள் சென்னை மக்களோடு... ஓபிஎஸ் மகன் எங்கே? ராமதாசின் மகன் எங்கே? ஜெயக்குமார் மகன் எங்கே? P.H.பாண்டியன் மகன் எங்கே?  மூப்பனாரின் மகன் எங்கே ? விஜயகாந்தின் மனைவி எங்கே? கிருஷ்ணசாமி மகன் எங்கே ? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!