கட்சித் தலைவரே கட்சியில் உள்ள பெண்களைப் பற்றி மோசமாகப் பேசுவதாக அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சித் தலைவரே கட்சியில் உள்ள பெண்களைப் பற்றி மோசமாகப் பேசுவதாக அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட பின் கடந்த இரு மாதங்களாக விசாரணைக்காக கேட்டுக் கொண்டிருந்தேன். என் தரப்பு விளக்கத்தையும் கட்சித் தலைமைக்கு மெயில் அனுப்பியுள்ளேன். அதையும் தாண்டி விசாரணையே இல்லாத நிலையில் என்னை குறி வைத்து வார் ரூமிலிருந்து அவதூறு செய்திகளை பரப்பினர். நான் துபாய் ஹோட்டலில் என்ன செய்து கொண்டிருந்தேன். என்னிடம் என்ன மாதிரியான ஆதாரங்கள் உள்ளன என்றெல்லாம் என்னை கேள்வி கேட்டு வருகிறார்கள். விசாரணைக்காக காத்திருக்கும் என்னை இப்படி குறி வைத்து அவதூறு பேசும் போது கூட மாநில தலைவரான அண்ணாமலை அவர்களை தடுக்கவில்லை. ஹனி டிராப் சம்பவங்களை பத்திரிகை ஒன்று ஆராய்ந்துள்ளது. அதில் மதன் ரவிசந்திரன் 15 வீடியோக்களை வைத்திருக்கிறார், பாஜக தலைவர்கள் தொடர்பான வீடியோக்களையும் அவர் வைத்துள்ளார். ஹனி டிராப் என்பது பெண்களுக்கு ஆபத்தான விஷயம். துபாய் ஹோட்டலில் நான் என்ன செய்தேன் என்பது குறித்து 150 பேருக்கு மத்தியில் அண்ணாமலை மிகவும் கொச்சையாக பேசியிருந்தார். அது பற்றி நான் பேசினால் அது அசிங்கமாகிவிடும் என கூறியிருந்தார். இது தவறாக போய்விட்டது. இதனால் என்னை எல்லோரும் போன் செய்து துபாய் ஹோட்டலில் என்ன செய்தீர்கள் என அசிங்கமாக கேட்டனர். நீங்கள் எது செய்தாலும் அண்ணாமலைக்கு என்ன என கேள்விகளை என்னிடம் போனில் கேட்டனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு வழக்கு..! விசாரணையை ஒத்திவைக்க கோரிய தமிழக அரசு.! எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்
என் பெயரை சொல்லியே அவர் பேசியதாகவும் கேள்விப்பட்டேன். இதையடுத்து நான் அண்ணாமலைக்கு மெசேஜ் செய்தேன். அந்த மெசேஜில் நீங்கள் எப்படி என்னை பற்றி தவறாக பேசினீர்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்ணை எப்படி தவறாக பேச முடியும்? ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என கேட்டேன். அதற்கு அண்ணாமலையிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. அதன்பின்னர்தான் பத்திரிகை ஒன்றில் அலிஷா அப்துல்லா வீடியோவும் என்னுடைய வீடியோவும் துபாயில் இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் நான் மிகவும் உருக்குலைந்துவிட்டேன். விசாரணையே இல்லாமல் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். என்னை பற்றி அண்ணாமலை சொன்னதாக வரும் தகவல்களையும் அவர் மறுக்கவே இல்லை. அந்த பெண்ணை யாராவது கேவலமாக பேசினால் பேசட்டும் என அவர் பாட்டுக்கு இருக்கிறார். நாங்களும் எவ்வளவோ எதிர்த்து குரல் கொடுத்தாலும் அண்ணாமலை வைத்துள்ள தனியார் வார் ரூம்களில் இருந்து கடுமையாக விமர்சித்து பதிவுகள் வருகின்றன. நான் பாஜக மூத்த நிர்வாகிகள் சிலரிடமும் என் புகாரை அளித்துள்ளேன். அலிஷா அப்துல்லா தனக்கான பிரச்சினையை பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பிரஸ்மீட் வைத்தார்கள்.
இதையும் படிங்க: கடிதத்தை வாங்காமல் அடம்பிடிக்கும் இபிஎஸ்..! அதிமுக மோதல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மெயில் அனுப்பிய சாகு
அது போல் சூர்யா சிவா- டெய்சி விவகாரத்திலும் பிரஸ் மீட் வைக்க அனுமதித்தார்கள். ஆனால் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான் என் வீட்டிலிருந்து பிரஸ் மீட் வைத்தேன். எனக்கு கட்சியிலிருந்து எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. பாஜகவின் பைலாவில் ஒருவரை விசாரணையே இல்லாமல் நீக்கலாம் என்ற விதிகள் எல்லாம் இல்லை. இவை எல்லாவற்றையும் தாண்டி நான் கேட்பதெல்லாம் விசாரணைதான். என்னை கார்னர் செய்ய என்ன காரணம் என தெரியவில்லை. நான் சேவைசெய்வதற்காக கட்சிக்கு வந்தேன். ஆனால், மன உளைச்சல்தான் ஏற்பட்டது. யாராவது பெண்களைத் தவறாகப் பேசினால் நாக்கை அறுப்பேன் என்பார். அவரே தவறாகப் பேசியிருக்கிறார். அவரை என்ன செய்வது? 150 பேருக்கு முன்பாக என்னை அவதூறாகப் பேச என்ன உரிமை இருக்கிறது? டெல்லியில் இருக்கும் அனைவரிடமும் சொன்னேன். நடவடிக்கை எடுப்பார்கள் எனக் காத்திருந்தேன். ஆனால், அவ்வளவு 'ட்ரோல்' செய்தார்கள். எதிர்க்கட்சியினர் 'ட்ரோல்' செய்தால் பரவாயில்லை. ஆனால், இவர்களே செய்தார்கள். என்னுடைய நிலைக்கு அண்ணாமலைதான் காரணம்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகள்.. உச்சநீதிமன்றம் அதிரடி..!
நல்ல தலைவராக இருந்தால் என்ன அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஒரு நொடியில், கட்சிக்கு நான் என்ன செய்தேன் எனக் கேட்கிறார்கள். பதிலுக்கு, இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் எனக் கேட்பேன். நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதனால், பிற கட்சிகளில் இருந்துவரும் அழைப்புகள் குறித்துப் பரிசீலிப்பேன். எதற்காக இந்தக் கட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் வேலை பார்த்தேனோ அந்த நோக்கம் சிதைந்துவிட்டது . கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் திருவாரூரைச் சேர்ந்த பெண் ஒருவரும் புகார் அளித்தார். எல்லோருக்கும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. கட்சித் தலைவரே கட்சியில் உள்ள பெண்களைப் பற்றி மோசமாகப் பேசும்போது, பெரும் மன உளைச்சலாக இருந்தது. இரவெல்லாம் இதைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன். முடிவாக கட்சியிலிருந்து விலக முடிவுசெய்தேன் என்று தெரிவித்தார்.
I have taken the decision with heavy heart to resign from TNBJP for not giving opportunity for an enquiry, equal rights & respect for women. Under Annamalai leadership women are not safe. I feel better to be trolled as an outsider.
. .
முன்னதாக பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.