ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே

By Raghupati R  |  First Published Feb 8, 2023, 7:08 PM IST

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் அவருக்காக இயங்கும் வார் ரூம் மீதும் பல்வேறு புகார்களை வைத்து வருகிறார்.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தொடர்ந்து அண்னாமலையை மட்டுமல்ல, எல்லா கட்சிகளையும் சீண்டி வருகிறார் காயத்ரி ரகுராம்.

அவர் வெளியிடும் ட்விட்டர் பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெளியிட்ட பதிவில், ‘பக்கா 420கள் மட்டுமே முன்னாள் ஐபிஎஸ்ஸால் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் மோடிஜியின் முகம் அல்ல, வசூல்ராஜா ஐபிஎஸ்-ன் முகம். இந்த பக்கா 420கள் அடி ஆளாகவும் தாதா கிரியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 4 கொலை!.. கஞ்சா விற்பனை அமோகம்! முதல்வருக்கு இது தெரியாது - திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

மற்ற அப்பாவி உண்மையான காரியகர்த்தாக்கள் விசாரிக்கப்படாமல் வெளியே அனுப்பப்படுகிறார்கள். அதிகாரத்தின் உச்சங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்’ என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் ஆளும் கட்சியான திமுகவை வெளுத்து வாங்கியுள்ளார் காயத்ரி ரகுராம்.

அப்பதிவில், ‘ரெட் ஜெயண்ட் மற்றும் சன் பிக்சர்ஸ் மூலம் 100 கோடி பட்ஜெட் படங்களை எடுப்பதற்கு பதிலாக அவர்களால் பேனா கட்ட முடியும். ஆனால் பிரச்சனை இது அரசு இடம், அரசு திட்டம். அவர்கள் அதை சொந்தமாக்க முடியாது. கடற்கரையில் இடத்துக்கு தனியார் நிறுவனத்தால் இடம் பெற முடியாது.

ஆனால் அரசாங்கத்தால் மட்டுமே முடியும் அதுதான் பிரச்சினை. பின்னர் கடற்கரையில் உள்ள இடம் அனைத்து தலைவர்களின் நினைவகத்திற்கும் இடமாக மாறும், நிரம்பிவிடும். பிரச்சினை பணத்தைப் பற்றியது அல்ல, அது இடத்தைப் பற்றியது’ என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுநாள் வரை தமிழக பாஜகவை பற்றி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வந்த காயத்ரி, தற்போது ஆளும் கட்சியான திமுகவையும், தற்போது சர்ச்சைக்குள்ளான பேனா நினைவு சின்னம் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை மட்டுமல்ல, சலசலப்பையும் உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமா? இதுவும் தான்! பசு அணைப்பு தினத்தை கையில் எடுத்த விலங்குகள் நல வாரியம்

click me!