ஒரு நாளைக்கு 4 கொலை!.. கஞ்சா விற்பனை அமோகம்! முதல்வருக்கு இது தெரியாது - திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

By Raghupati RFirst Published Feb 8, 2023, 6:31 PM IST
Highlights

திமுக கடந்த  22 மாத ஆட்சியில் ஒரு திட்டத்தையும் செய்யவில்லை. திமுக சொல்வதை செய்யமாட்டார்கள். தேர்தலுக்காக வாக்குறுதி மட்டும் கொடுப்பவர்கள் தான் திமுகவினர் என்று திமுகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்த கூட்டத்தில், அனைத்து வணிகர் சங்கம், ஜவுளி துறையினர் உள்ளிட்ட தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர்,  ஈரோடு மாவட்டத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பவானி ஆறு சீரமைப்பு பணிகள் செய்துள்ளோம். ரூ.40 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள் கொண்டு வந்துள்ளோம்.நான்கு வழிச்சாலை கொண்டுவர அரசாணை வெளியிட்டோம்.

இதையும் படிங்க..அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் - அதிமுகவை துரத்தும் சர்ச்சை!

ஆனால் தற்போதை அரசு அதை செய்யவிடமால் தடுத்து வருகிறார்கள். பவானி - மேட்டூர் நான்கு வழிசாலை, ஈரோடு -  கரூர் நான்கு வழிச் சாலை போன்ற திட்டங்கள் போடப்பட்டது திமுக கடந்த  22 மாத ஆட்சியில் ஒரு திட்டத்தையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில்  செங்கல் சூளைக்கு மண் அள்ளும் பிரச்சினை தீர்வு கண்டோம், ஆறு மற்றும் குளங்கள் அனைத்தும் தூர்வாரியுள்ளோம். திமுக சொல்வதை செய்யமாட்டார்கள். தேர்தலுக்காக வாக்குறுதி மட்டும் கொடுப்பவர்கள் தான் திமுகவினர். நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை.

தினமும் 2 முதல் 4 கொலை நடக்கிறது, எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அமைச்சர் யாராச்சு கல் எடுத்து விசுவாங்களா ? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மேடையில் கையை வெட்டுவேன்னு ஒரு அமைச்சர் பேசுகிறார். முதலமைச்சருக்கு இது எதுவும் தெரியாது. கொரானாவால் தொழில் துறைகள் முடங்கியுள்ளது. தற்போதைய அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இலவச வேஷ்டி சேலைகள் கொடுத்ததே விசைதறிகள் முடங்க கூடாது என்பதால்தான், ஆனால் தற்போதைய அரசு அதை நிறுத்திவிட்டது என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

இதையும் படிங்க..AIADMK: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!

click me!