''திருந்தாத ஜென்மங்கள்'' - ஆகே நகர் வாக்காளர்களை கடுமையாக சாடிய கங்கை அமரன் அதிர்ச்சி பேச்சு!

First Published Apr 6, 2017, 11:56 AM IST
Highlights
gangai amaran open talk against RK Nagar Voters


இன்னும் வெறும் 5 நாட்களே வாக்குப்பதிவுக்கு உள்ள நிலையில், பரபரப்பின் உச்சத்தை அடைந்துள்ளது ஆர்கே நகர். 

மாதம் மும்மாறி பொழிகிறதோ இல்லையோ, ஆனால் ஆர்.கே. நகரில் பண மழை பெய்யவில்லை. மாறாக கொட்டோ கொட்டு என கொட்டுகிறது.

அதிமுகவின் ஒரு தரப்புக்கான பட்ஜெட் மட்டும் 100 கோடியாம். மற்றொரு தரப்பில் 45 கோடி பட்ஜெட்டாம்.

எதிர்க்கட்சியும் சும்மா விடுவார்களா. அவர்களும் 50 ‘சி’ வரை, மூட்டையை அவிழ்க்க தயாராக இருக்கிறார்களாம். இதில், 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யும் அணி, முதல் கட்டமாக சுட சுட கைப்படாத ‘2 இரண்டாயிரம்’ தாள்களை வினியோகம் செய்துவிட்டதாம்.

இதை பார்த்த எதிர் அணியினரும், பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட்டுகளும் அதிர்ச்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

வாங்கிய காசுக்கு ஆர்.கே. நகர் மகக்ள், தங்களது விசுவாசத்தை காட்டிவிட்டால், 100 கோடி ரூபாய் தான் நிச்சயம் ஜெயிக்குமாம். இதனால், கலங்கிபோன பிஜேபி தலைவர் தமிழிசை, கட்சி பிரமுகர்களுடன் சென்று தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வாக்கு சேகரிக்கும்போது, ஆர்.கே. நகர் வாக்காளர்களிடம் பேசிய பாஜக வேட்பாளரும், பிரபல இசையைமப்பாளருமான கங்கை அமரன், அடுக்கடுக்கான குண்டுகளை வீசினார்.

எந்தெந்த கட்சிகள் எவ்வளவு பணம் கொடுக்கிறது என்ற தகவல்களை புட்டு புட்டு வைத்தார். இறுதியில், திமுக தலைவர் பாணியில், வாக்காளர்களை சாட ஆரம்பித்துவிட்டார்.

“திருந்தாத ஜென்மங்கள் இந்த வாக்காளர்கள். யார் பணம் கொடுப்பார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். 3 கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு, பணப்பட்டுவாடா செய்கின்றன.

பணத்துக்கு அடிமை ஆகாமல், நல்ல கட்சியையும், வேட்பாளரையும் பார்த்து ஓட்டு போடுங்கள்” என ஆவேசமாக வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்களை பார்த்து, பணம் வாங்குபவர்கள் ஒரு திருந்தாத ஜென்மங்கள் என கங்கை அமரன் வெளிப்படையாக பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.

click me!