"சட்டமன்றத்தில் எனக்காக இருக்கையை எங்கே அமைப்பார்கள் என்று தெரியும்" - நனவாகுமா கங்கை அமரனின் கனவு?

 
Published : Mar 18, 2017, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
"சட்டமன்றத்தில் எனக்காக இருக்கையை எங்கே அமைப்பார்கள்  என்று தெரியும்" - நனவாகுமா கங்கை அமரனின் கனவு?

சுருக்கம்

gangai amaran nominate in rk nagar

ஆர்.கே.நகரில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு அக்கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தமிழிசை செளந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.சார்பாக இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுவதாக செய்தித்தொலைக்காட்சிகளில் நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.  

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆர்.கே.நகரில் கங்கை அமரன் களம்காண்பார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை செளந்திரராஜன், பிரதமர் ஆதரவுடன் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தனது பிரபலத்தை பயன்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தன் காரணமாக தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

இதனைத் தொடர்ந்து பேசிய கங்கை அமரன், போட்டியிடுவதற்காக வாய்ப்பளித்த தேசிய மற்றும் மாநில பா.ஜ.க.நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவது உறுதி என்றும், சட்டமன்றத்தில் எனக்கான இருக்கையை எங்கே ஒதுக்குவார்கள் என்பது தற்போதே தெரிவதாகவும் தெரிவித்தார். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ்.அணிக்கும் திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேர்தலில் தாம் வெற்றி பெறுவது உறுதி என்றும், சட்டமன்றத்தில் எனக்காக இருக்கையை எங்கே அமைப்பார்கள் என்பது தமக்குத் தெரியும் என்றும் கங்கை அமரன் கூறியுள்ளார். 

தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பாகவே ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆவேன் என கங்கை அமரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவரது கனவு நனவாகுமா?

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்