பாவங்கள் மட்டுமல்ல, 'கங்கை நீர் கொரோனா வைரஸையும் அழிக்கும்..!! ஐஐடி முன்னாள் பேராசிரியர் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published May 21, 2020, 5:20 PM IST
Highlights

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸை கொள்ளும் ஆற்றல் நம்நாட்டின்  கங்கை நதி நீருக்கு உள்ளது என  ஐஐடி முன்னாள் பேராசிரியரும் கங்கை நதி ஆராய்ச்சி மையத்தின் நிறுவனருமான யூ .கே சவுத்ரி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸை கொள்ளும் ஆற்றல் நம்நாட்டின்  கங்கை நதி நீருக்கு உள்ளது என  ஐஐடி முன்னாள் பேராசிரியரும் கங்கை நதி ஆராய்ச்சி மையத்தின் நிறுவனருமான யூ .கே சவுத்ரி கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் வேகமெடுத்துவரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும்கூட கொரோனா பரவலை  கட்டுப்பாட்டுத்த  முடியவில்லை. எனவே இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில்  உலகளவில்  30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன , அதில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவுபகல் பாராமல் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்பில் தங்களை அற்பணித்து  வருகின்றனர். இந்தியாவும் அதற்கான ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது.  

இந்நிலையில்  வைரஸை அழிக்கக்  கூடிய ஆற்றல் இந்தியாவின் புனித நதி என அழைக்கப்படும் கங்கை நதி  நீருக்கு இருப்பதாக  இந்நதி பற்றிய விவரம் அறிந்த பலரும் கூறுகின்றனர். வாரணாசியைச்  சேர்ந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய பேராசிரியரும், ஐஐடியின்  முன்னாள்  நிதி பொறியாளரும் ,  சிவில் இன்ஜினியரிங் முன்னாள் பேராசிரியருமான  யூ.கே சவுத்ரி ,  கங்கை  நதி நீரில் கணிசமான அளவுக்கு  பாக்டீரியோபேஜ்கள் உள்ளன - இது பாக்டீரியாக்களைக் கொல்லும் ஒரு வகையான வைரஸ் . வேதங்கள், புராணங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற நமது பழங்கால வேதங்கள்  கங்கை நதியை மருத்துவ நீர் எனக் குறிப்பிடுகின்றன.  அதன் பின்னர் இது குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளும்  நோய்க்கிருமிகளை கொல்லும் திறன் கங்கை நீருக்கு உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர் .  தற்போது கொரோனா வைரஸ் பலரையும் தாக்கி வரும் நிலையில் கங்கை நதி  நீரிலுள்ள பாக்டீரியோபேஜ்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும் , 

 

இந்தியாவிலுள்ள முக்கிய நதிகளான கங்கை ,  யமுனை ,  சோன் ஆகிய மூன்று நதிகளும்  இமயமலை வம்சாவளியை கொண்டவை , ஆனால் இதன் நிறங்கள் ஒவ்வொன்றும்  வேறுபட்டிருக்கும் .  கங்கை நீர் வெண்மை நிறமும் ,  யமுனை நீர் பச்சை நிறமும் ,  சோன் நதி நீர் பழுப்பு நிறமும் கொண்டவையாகும் . இந்த மூன்று நதிகளிலும் கங்கை நீர் மிக உயர்ந்த தன்மை கொண்டதாக கருதப்படுகிறது . மற்ற இரண்டு நதிகளுடன் ஒப்பிடும்போது கங்கைநீர் ஆழம் குறைந்த நீரோட்டத்தில் இருந்து உருவாகிறது  எனவே அதன் அடிப்படையில் நதிகளின்  நிறமும் தரமும் மாறுபடுகின்றன .  கங்கை நதியின் மகத்துவமே இதில் உள்ள மருத்துவ குணம் தான் .  கங்கையில் உள்ள பாக்டீரியோபேஜ்களால் மண், நீர் மற்றும் காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும். கங்கை நீரின் மருத்துவ குணத்தை பாதுகாக்கவும்  அதன் மூலம் கொரோனா வைரஸை  எதிர்த்துப் போராடுவதையும் நாம் யோசனையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

click me!