காந்தி கருத்துகள் தற்போதைய சூழலுக்கு தேவை; கமல் டுவிட்!

 
Published : Oct 02, 2017, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
காந்தி கருத்துகள் தற்போதைய சூழலுக்கு தேவை; கமல் டுவிட்!

சுருக்கம்

Gandhi ideas need current context Kamal Twitt!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவரின் கருத்துகளை நினைவு கூறும் வண்ணம் நடிகர் கமல் ஹாசன் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று காந்தி ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 149-வது காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கருத்துக்களை எடுத்துரைக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் கமல் ஹாசன், தனது அரசியல் பிரவேசம், சமூகம் குறித்தும் நேற்று  
சென்னை அடையாறில் திறக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் வரை தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா, இன்று கொண்டாடும் நிலையில், காந்தியின் கருத்துக்களை நினைவு கூறும் வண்ணம் டுவிட்டர் பதிவு ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார்.

அதில், முதலில் நம்மை ஒதுக்குவார்கள், பின்னர் நம்மை பார்த்து நகைப்பார்கள். இதையடுத்து நம்மிடம் சண்டையிடுவார்கள். அதன் பின்னரே நாம் வெற்றியடைவோம் என்று பதிவிட்டுள்ளார்.

காந்தியின் இந்த வார்த்தைகள் அளிக்கும் நம்பிக்கை தற்போதைய சூழலுக்கு தேவைப்படுவதாகவும் கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!