ஜி ஸ்கொயர் திமுக முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதா.? ஆதாரங்களோடு அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிறுனவம்

By Ajmal Khan  |  First Published Apr 24, 2023, 9:13 AM IST

ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது அல்ல, ஜி ஸ்கொயர் குறித்து அண்ணாமலை குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை, அடிப்படை ஆதாரமற்றவை என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 


திமுக சொத்து பட்டியல்

திமுகவினர் மீது தொடர்ந்து புகார் தெரிவித்த அண்ணாமலையிடம் ரபேல் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது ரபேல் வாட்ச் தொடர்பான ஆவணங்களையும் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலையும் வெளியிட இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி தனது வாட்சை கோவையை சேர்ந்த தனது நண்பர் ஒருவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதனை தொடர்ந்து  திமுக நிர்வாகிகளான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி, எ.வ.வேலுவுக்கு ரூ.5,552.39 கோடி, கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி என,

Tap to resize

Latest Videos

திமுக குடும்பத்திற்கு சொந்தமானதா.?

திமுக நிர்வாகிகளின் 17 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என திமுக பைல்ஸ் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக முதல் குடும்ப உறுப்பினர்களின் சொத்து என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகம், கர்நாடக உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஜி ஸ்கொயருக்கு சொந்தமான இடங்களில்  சோதனை நடத்தி வருகிறது. இந்தநிலையில்  ஜி ஸ்கொயர் நிறுவனம்  அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் வகையில், வெளியிட்டுள்ள 29 பக்க அறிக்கையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது அல்ல, ஜி ஸ்கொயர் குறித்து அண்ணாமலை குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை,

சட்டப்படி நடவடிக்கை

அடிப்படை ஆதாரமற்றவை, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மொத்த வருமானம் 38,827.70 கோடி என்பது பொய்யான தகவல் என கூறியுள்ளது. மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பாக வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டுமானங்கள் தொடர்பான ஆவணங்களையும் ஜி ஸ்கொயர் நிறுவனம் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே நிறுவனம் செயல்படுகிறது. எங்கள் நிறுவனம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லையென தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களை தெரிவித்தால் அடுத்த கட்டமாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

திமுகவிற்கு செக் வைக்கிறதா மத்திய அரசு..! ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி சோதனை

click me!