விவாதத்தை ஏற்கமால் கைது செய்வது நல்ல அணுகுமுறையா? – ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி...

Asianet News Tamil  
Published : Jun 14, 2017, 06:12 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
விவாதத்தை ஏற்கமால் கைது செய்வது நல்ல அணுகுமுறையா? – ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி...

சுருக்கம்

g ramakirushnan condemned about dmk stalin arrest

சட்டப்பேரவையில் ஸ்டாலின் கொண்டுவந்த விவாதத்தை ஏற்காமல் கைது செய்தது நல்ல அணுகுமுறை அல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஒ.பி.எஸ் அணியின் எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பினார்.

ஆனால் சபாநாயகர் தனபால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை திமுக உறுப்பினர்கள் ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனபால் எச்சரித்தார். திமுகவினர் அடங்காததால் திமுகவினரை வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு தன்பால் உத்தரவிட்டார்.

இதையடுத்து திமுகவினர் வெளியேற்றபட்டனர். வெளியேறிய திமுகவினர் வீடியோ விவகாரம் குறித்த பதாகைகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேரவையில் ஸ்டாலின் கொண்டுவந்த விவாதத்தை ஏற்காமல் கைது செய்தது நல்ல அணுகுமுறை அல்ல என தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுகவில் நடக்கும் குளறுபடிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய ராமகிருஷ்ணன், அதிமுக ஆட்சியை தக்கவைத்து கொள்ளவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாகவும், ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.  

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!