அதிமுகவுடன் கூட்டணி தொடருமா...? ஜி.கே. வாசன் அதிரடி தகவல்..!

By Asianet TamilFirst Published Nov 28, 2020, 8:05 PM IST
Highlights

நம் பலத்துக்கு ஏற்ப வேட்பாளர்களைப் பெற்று நம்முடைய வெற்றிக்கும் கூட்டணியின் வெற்றிக்கும் பாடுபடுவோம் என்று தாமாக தலைவர் ஜி.கே.வாசன்  தெரிவித்துள்ளார்.
 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். “ ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை பெரிய பொதுக்கூட்டத்துடன் கொண்டாடுவோம். ஆனால், கொரோனா காலம் என்பதால் முடியவில்லை. மேலும் மக்களுக்கு நாம் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசின் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து விதிகளுக்கு உட்பட்டு  கொண்டாடுகிறோம். கொரோனாவை தடுப்பதிலே கட்டுப்பாட்டோடு நடக்கும் கட்சி தமாகாதான்.


தடுப்பூசி வரும் வரை நாம் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது.  இன்று தமாகா வெற்றிபெறும் நிலையில் உள்ளது. கூட்டணி தர்மத்தை நாம் கடைப்பிடித்து கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்துவோம். நம் பலத்துக்கு ஏற்ப வேட்பாளர்களைப் பெற்று நம்முடைய வெற்றிக்கும் கூட்டணியின் வெற்றிக்கும் பாடுபடுவோம்.” என்று ஜி.கே.வாசன்  பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக கூட்டணியில் தமாகா இருந்து வருகிறது. அக்கூட்டணியிலேயே தாமாக தொடரும். கூட்டணியில் ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தமாகா உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்டுகள் கொடுக்க வேண்டும் என்பதை அதிமுக உரிய ஆய்வு நடத்தி, வெற்றி பெறும் இடங்களை ஒதுக்க வேண்டும். டிசம்பர் 1 முதல் 15 வரை சட்டப்பேரவை தொகுதிகளில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகிறோம். ஜனவரி 1 முதல் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குவோம்.” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

click me!