கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமைச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை..!

By vinoth kumarFirst Published Apr 29, 2021, 9:50 AM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், பெரிய ஷாப்பில் மால் உள்ளிட்டவைகளையும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அப்படி இருந்த போதிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,000ஐ நெருங்கியது. உயிரிழப்பும் 100ஐ நெருங்கி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்து பின்னர், பாதிப்பு அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அல்லது முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவீத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால் இந்த பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!