Breaking: அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு.. தமிழக அரசு அதிரடி.

Published : May 22, 2021, 02:40 PM ISTUpdated : May 22, 2021, 03:07 PM IST
Breaking: அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு.. தமிழக அரசு அதிரடி.

சுருக்கம்

தமிழகத்தில் மே.24 முதல் மே.31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுதப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை வழங்கியதை அடுத்து  இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தொற்றால் அதிக உயிரிழப்பை சந்திக்கும் மாநிலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையைவிட பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நாளொன்றுக்கு குறைந்தது  34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதிய படுக்கை வசதியின்மை, ஆட்சி தட்டுப்பாடு மிகக் கடுமையாக நிலவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவித்தது, அது நடைமுறையிலுள்ளது. 

அதேபோல கடந்த மே 15ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 10 மணிவரை மட்டுமே மளிகை கடைகள் மற்றும் இதர கடைகள் திறந்திருக்க வேண்டும் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. எனவே பொதுமக்கள் வெளியில் வர முடியாத வகையில் முழு உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது, இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, மருத்துவ வல்லுநர் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது அதில் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மே.24 முதல் மே.31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுதப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை