#BREAKING தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு... முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசக தகவல்..!

By vinoth kumarFirst Published May 26, 2021, 11:11 AM IST
Highlights

ஊரடங்கு போடப்பட்டதின் முழு பயனாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது என முதல்வர்  மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். 

ஊரடங்கு போடப்பட்டதின் முழு பயனாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது என முதல்வர்  மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். 

திருவள்ளூர் நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் 2.24 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் தடுப்பூசி போடும் சராசரி விகிதம் உயர்ந்திருக்கிறது. தடுப்பூசிதான் காவல்காரனாக விளங்குகிறது என்பதால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு நேரடியாக தடுப்பூசி வாங்க உள்ளோம். தேவையான தடுப்பூசிகள் கிடைத்தபின் தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. பற்றாக்குறை இருக்கும் இடத்தை கூறினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். முழு ஊரடங்கின் பலன் அடுத்த 2, 3 நாட்களில் தெரியத் தொடங்கும். கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் தமிழக அரசு முழு மூச்சாக செயல்படுகிறது. மக்கள் அனைவரும் முழு ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும். 

தேவைப்பாட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும். தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீட்டிக்கலாம் என சட்டமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. சட்டமன்ற குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

click me!