பட்டியலின மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்.... எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் பாராட்டு..!

By Thiraviaraj RMFirst Published Dec 5, 2020, 5:09 PM IST
Highlights

7 உட்பிரிவு சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும், சலுகைகளை பெற பட்டியலின பட்டியலில் தொடர்ந்து இருப்பார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

7 உட்பிரிவு சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும், சலுகைகளை பெற பட்டியலின பட்டியலில் தொடர்ந்து இருப்பார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 
 
பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும். இந்த சாதிகளை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று இந்த சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த ஆண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த குழு, அரசியல் கட்சியினர், அச்சமூகம் சார்ந்த இயக்கங்கள், மக்களிடையே மனுக்களை பெற்று ஆய்வு செய்து தமிழக அரசிடம் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

 

குழு பரிந்துரை அடிப்படையில் மாநில பட்டியலினத்தில் உள்ள  பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.எனினும், பொதுபெயரில் மேற்குறிப்பிட்ட சாதிகள் அழைக்கப்பட்டாலும் சமூக நிலைகளை கருத்தில்கொண்டு பட்டியலின வகுப்பிலேயே அவைகள் தொடரும் என்றும் பட்டியலின வகுப்பின்படி இவர்கள் பெற்றுவந்த சலுகைகள் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும், பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, அந்த சமூக மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செல்லும் அதே பாதையில் சென்று, எல்லோருக்கும் வளர்ச்சி, யாருக்கும் பாதகம் இல்லை என்பது போல இந்த முதல்வரின் அறிவிப்பு பார்க்கப்படுகிறது. பல்வேறு தரப்பில் இருந்து முதல்வருக்கு பாராட்டுக்களும் வந்தவன்னம் உள்ளன.

click me!