இனி எல்லாமே வெற்றிதான்... முழங்குகிறார் துரை முருகன்... திகட்டத் திகட்ட தில்லியில் திமுக... 

First Published Dec 21, 2017, 11:21 AM IST
Highlights
from now we have to prove our victory dmk workers happiest moments


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.   நாடு முழுதும் பரபரப்பாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டு, பல கட்ட விசாரணைகள் நடத்தப் பட்ட நிலையில், சிபிஐ., தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தேவையான போதுமான ஆதாரங்களை வைக்க முடியவில்லை என்றும், சந்தேகத்திற்கு இடமின்றி ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு எதிராக வலுவான வகையில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்று கூறினார் நீதிபதி ஓ.பி.ஷைனி.

இன்று காலை நீதிமன்றம் கூடியதும், காலை 10.30க்கு இதற்கான தீர்ப்பை வழங்கினார் நீதிபதி ஓ.பி.ஷைனி. ஒரே வார்த்தையில், அனைவரும் விடுதலை என்றும், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் போதிய ஆதாரங்களுடன் அரசுத் தரப்பால் நிரூபிக்க இயலவில்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்றார் ஓ.பி.ஷைனி.

இதை அடுத்து, திமுக.,வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக.,வுக்கு பெரும் வெற்றி என்று கூறிக் கொண்டு ஊடகத்தினரிடம்  பேசினார் திமுக.,வினி துரை.முருகன். 

தவறான, அரசியல் உள்நோக்கத்துடன் திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த தொடரப்பட்ட  வழக்கு இது என்று கூறிய துரை.முருகன்,  நீண்டகால வாதங்களுக்கு பின்னர் நியாயம் வென்றுள்ளது என்று கூறினார். 

இதனிடையே, திமுக., தொண்டர்கள்  ஓ.பி.ஷைனிக்கு ஒட்டுமொத்த நன்றி என்று வாய் நிறைய இனிப்புடன் கூறினர். இந்தத் தீர்ப்புக்கு கிராம மக்களும் பாராட்டு தெரிவிக்கிறார்கள் என்று கூறினர். 

இதனிடையே,  பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்காடிய ஒருவர் நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய வழக்கில் சி.பி.ஐ வழக்கறிஞர்களை எதிர்த்து தாமே வழக்காடி வெற்றி பெற்றிருக்கிறார் என்று ஆ.ராசாவுக்கு ஒட்டு மொத்த பாராட்டை ஒதுக்கினர் திமுக.,னர். 

தில்லியில் தொடங்கி, தமிழகத்திலும் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கி இந்தத் தீர்ப்பு குறித்து கொண்டாடுகின்றனர் திமுக.,வினர். 

click me!