இப்போ இருந்தே 22 சதவிகித கமிஷன் வந்திடணும்... சென்னையின் வருங்கால திமுக மேயர் அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published May 28, 2021, 6:17 PM IST
Highlights

‘மாநகராட்சி சார்பில் நடக்கும் டெண்டர் பணிகளில் 22 சதவீதம் கமிஷன் வந்துவிட வேண்டும்’’என உத்தரவு போட்டு இருக்கிறாராம். 
 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என நம்பிக்கை அனைத்து கட்சியினருக்கும் வந்துவிட்டது. சென்னையை பொறுத்தவரை திமுகவே மேயர் தேர்தலில் வெற்றிபெறும் என்பது நிதர்சனம். ஆகையால் சென்னை மாநகர மேயர் வேட்பாளராக யாரை அக்கட்சி நிறுத்தும் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்து வருகிறது.

 

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., புள்ளியான சிற்றரசு, சமீபத்தில் மாநகராட்சியின் ஒன்பதாவது மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை அழைத்துப் பேசி இருக்கிறார். அப்போது ‘மாநகராட்சி சார்பில் நடக்கும் டெண்டர் பணிகளில் 22 சதவீதம் கமிஷன் வந்துவிட வேண்டும்’’என உத்தரவு போட்டு இருக்கிறாராம். 

தேர்தலே அறிவிக்கவில்லை அதற்குள் நாட்டாமை செய்கிறாரே என அதிகாரிகள் அதிர்ச்சியில வாயைப் பிளக்க, ’’சென்னை மேயர் வேட்பாளர் நான் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டார்’’ எனக் கூறியிருக்கிறார். இது உண்மையாக இருக்கலாம் என நம்பும் அதிகாரிகள் வாயடைத்து போயுள்ளனர். 
 

click me!