கொரோனா நோயாளிகளுக்கு இலவச மருந்து...! அதிரடி காட்டிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ..!!

By T BalamurukanFirst Published Jul 13, 2020, 9:49 PM IST
Highlights

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தி அவர்களுக்கு உண்டான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தி அவர்களுக்கு உண்டான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று வரை 27 ஆயிரத்து 235 பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14,393 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 12,533 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 1814 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை ஆந்திராவில் 309 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என ஒரு வி தமான அச்சம் மக்களிடையே ஏற்படுட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்.

 மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கழிவறை மற்றும் தனித்தனி அறைகள் போதிய அளவில் இல்லாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு தேவையான வைட்டமின் மாத்திரைகள், சானிடைசர், கையுறைஉறை, முக கவசம், ஆக்சி மீட்டர் ஆகியவை உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பு உள்ளவர்களை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும்,  வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத வகையில் சிறிய வீடுகளில் வசிப்பவர்களுக்காக மாநிலம் முழுவதும் 37,500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வைட்டமின் நிறைந்த உணவு பொருள்கள், சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து உரிய மருந்து மாத்திரைகள்  வழங்குவதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என முதல்வர் ஜெகன் மோகன் கலெக்டர்களுடன் நடைபெற்ற காணொளிக்காட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்

click me!