ஜுலை31ம் தேதி வரை போக்குவரத்துக்கு தடை.! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!

By T BalamurukanFirst Published Jul 13, 2020, 9:23 PM IST
Highlights

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுப்பதற்காக, பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ 24.3.2020 முதல்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நிலைமையை கருத்தில்‌ கொண்டும்‌, மக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டும்‌, சில தளர்வுகளுடன்‌ 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஜுலை 31ம் தேதி வரையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இதைத்‌ தொடர்ந்து கொரோனா தொற்று சென்னையை புரட்டி எடுத்து வருகிறது.அதே வேளையில் மதுரையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் மதுரை கிழக்கு ,பரவை ,திருப்பரங்குன்றம், மதுரை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 14.07.2020 வரை முழுஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... "கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுப்பதற்காக, பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ 24.3.2020 முதல்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நிலைமையை கருத்தில்‌ கொண்டும்‌, மக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டும்‌, சில தளர்வுகளுடன்‌ 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுக்க மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொண்டு வரும்‌ நிலையில்‌, கொரோனா நோய்த்‌ தொற்று பரவலை கட்டுப்படுத்தும்‌ நோக்குடன்‌, மாநிலத்தில்‌ தனியார்‌ மற்றும்‌ அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.7.2020 முதல்‌ 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது.

தற்போது, தமிழ்நாட்டில், கொரோனா நோய் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 முடிய தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவை இயக்கப்படாது.தமிழ்நாடு அரசின்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்புநடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!