பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Published : Aug 30, 2021, 08:29 PM ISTUpdated : Aug 30, 2021, 08:34 PM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

சுருக்கம்

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள்‌ வரை பள்ளி, கல்லூரிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌. தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள்‌ மற்றும்‌ அரசு வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌ அடிப்படையில்‌, பள்ளி மற்றும்‌ அரசுக் கல்தூரிகள்‌ வரும்‌ 01.09.2021 முதல்‌ திறக்கப்பட உள்ளன.

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என  போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள்‌ வரை பள்ளி, கல்லூரிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌. தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள்‌ மற்றும்‌ அரசு வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌ அடிப்படையில்‌, பள்ளி மற்றும்‌ அரசுக் கல்தூரிகள்‌ வரும்‌ 01.09.2021 முதல்‌ திறக்கப்பட உள்ளன.

எனவே 2021-22 கல்வியாண்டில்‌, மாணவர்‌/மாணவியர்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌வரை அரசுப் பேருந்துகளில்‌ பள்ளி மாணவ மாணவியர் சீருடை அல்லது பள்ளிகளில்‌ வழங்கப்பட்ட புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து இருப்பிடத்தில் இருந்து பயிலும்‌ பள்ளி வரை சென்றுவர, கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌.

அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ தங்களது கல்வி நிறுவனத்தால்‌ வழங்கிய புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து தத்தம்‌ இருப்பிடத்தில் இருந்து பயிலும்‌ கல்வி நிறுவனம்‌ வரை சென்றுவர, கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌ என அமைச்சர்‌ ராஜகண்ணப்பன்‌ தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!