மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளும் கட்சி பிரமுகர்... 15 வயது சிறுமிக்கு கொடூரம்..!

Published : Aug 30, 2021, 05:21 PM IST
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளும் கட்சி பிரமுகர்... 15 வயது சிறுமிக்கு கொடூரம்..!

சுருக்கம்

ஆக மொத்தத்தில் தந்தை முறையான சிவகுமார்15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

எத்தனை சட்டங்கள் போட்டாலும், விழிப்புண்ர்வை ஏற்படுத்தினாலும், சிறுமிகளுக்கெதிரான பாலியல் தொந்தரவுகள் குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் இந்தக் குற்றச்சாட்டில் அடிக்கடி சிக்குகின்றனர். அப்படி சிக்கியிருப்பவர் திமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர். 15வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த திமுக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகாவில், தனியார் மதுபான விடுதி நடத்தி வருபவர் திமுக பிரமுகரான சிவகுமார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 9வயது சிறுவனை வைத்து மதுபான விற்பனை செய்தது ஏற்கனவே இவர் மீது சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் குஜிலியம்பாறை சேர்ந்த முத்து பொன்னரசி தனது கணவர் குமரேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக சிவகுமாருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

முத்து பொன்னரசிக்கு 15 வயதில் நித்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிவகுமார் நித்திகாவிற்கு செல்போனில் ஆபாசப் படங்களை காண்பித்து அந்தரங்க உறுப்புகளை தொடுவதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் முத்து பொன்னரசி புகார் அளித்ததின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர். ஆக மொத்தத்தில் தந்தை முறையான சிவகுமார்15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!