
மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை முதல் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து இடுகிறார்.
டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 - 2015 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு போக்குவரத்து துறையில், வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.95 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வாங்கியுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி, நாளை முதல் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து இடுகிறார்.