கிரிமினல் வழக்குக்கு தர முடியாது! தினகனுக்கு நீதிபதி கடும் கண்டனம்!

 
Published : Oct 26, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
கிரிமினல் வழக்குக்கு தர முடியாது! தினகனுக்கு நீதிபதி கடும் கண்டனம்!

சுருக்கம்

The judge condemned Dinakaran

அந்நிய செலாவணி வழக்கில், தங்கள் தரப்புக்கான கேள்விகளை முன்கூட்டியே தர வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு கோரியதற்கு நீதிபதி மலர்மதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் வங்கி கணக்குகளில் கடந்த 1995, 1996 ஆண்டுகளில், வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு, அமலாக்கத்துறை பதிவு செய்தது. 

மேலும், ரூ.28 கோடி அபராதமும், அமலாக்கத்துறை விதித்தது. அந்நிய செலாவணி மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி, டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்நிய செலாவணி வழக்கு, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி மலர்மதி முன்பு நடைபெற்றது. டிடிவி தினகரன், விசாரணைக்கு முன்பே அமலாக்கத்துறை கேள்விகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

தினகரனின் இந்த கோரிக்கைக்கு, நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அமலாக்கத்துறை இந்த கேள்விதான் கேட்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தீர்மானிப்பது நீதிக்கு எதிரானது என்றும், சிவில் நீதிமன்றத்தைப்போல குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிரிமினல் நீதிமன்றத்தில் உரிமை இல்லை என்றார்.

நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்றும் நான் வாங்கும் சம்பளத்துக்கு நான் வேலை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த வழக்கை, இன்று மாலை 4 மணிக்கு நீதிபதி மலர்மதி ஒத்தி வைத்தார். மாலை நடைபெறும் விசாரணையில், டிடிவி தினகரன் ஆஜராகி, அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!