விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை அடுத்து இடைக்கால பொதுச்செயலாளரை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்லி அமமுக கட்சியை ஆரம்பித்துவிட்டு இப்போது வேறு மாதிரி டிடிவி. தினகரன் பேசிவருகிறார் என அமமுக முன்னாள் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை அடுத்து இடைக்கால பொதுச்செயலாளரை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலசுந்தரம்;- இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டிடிவி.தினகரனின் கொள்கை பிடிக்காததால் கட்சியை வெளியேறி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம். அதிமுகவை ஒன்றிணைப்பது இருக்கட்டும்; முதல்ல அவங்க குடும்பம் ஒன்றிணையட்டும்.
அமமுகவில் என்னை போல் பேச முடியாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். அமமுக சம்மந்தமாக எந்த செய்தியையும் ஜெயா பிளஸ் ஒளிப்பரப்புவது இல்லை. அதிமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்லி அமமுக கட்சியை ஆரம்பித்துவிட்டு இப்போது வேறு மாதிரி பேசி வருகிறார். எத்தனை ஆண்டுகள் சிறை சென்று வந்தாலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லிவிட்டு தற்போது அவரது நிலைபாட்டை மாற்றியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்ன ஓபிஎஸ்வுடன் நட்பு பாராட்டி ஒன்றிணைவோம் என்று கூறுகிறார் டிடிவி.தினகரன் என அமமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.