முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி டெல்லியில் படுகொலை.. உச்சகட்ட அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Jul 7, 2021, 10:04 AM IST
Highlights

உடனே தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மஞ்சுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், இந்த படுகொலை குறித்து அவரது மகன் மோகன் குமாரமங்கலம்துக்கு அலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி டெல்லியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அவரது வீட்டில் பணியாற்றும் பெண்ணின் உதவியுடன் இப்படுகொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிலும் பயணித்து, வாஜ்பாய் தலைமையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ரங்கராஜன் குமாரமங்கலம், இவரது மனைவி பிரபல வழக்கறிஞர் கிட்டி, குமாரமங்கலம் (68) தென் மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் பகுதியில் வசித்து  வந்தார். 

இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் பணியாற்றும் பெண் ஒருவரின் உதவியுடன் மூன்று பேர் கொண்ட கும்பல் கிட்டி குமாரமங்கலத்தை படுகொலை செய்துள்ளது.   இந்நிலையில் அவரது வீட்டில் பணியாற்றும் மற்றொரு பெண் மஞ்சு என்பவர் நேற்று இரவு 11 மணிக்கு கைபேசியில், கிட்டி படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில் கிட்டி வீட்டில் தனியாக இருப்பதை வீட்டில் பணியாற்றும் பெண் மஞ்சி, கிட்டி வீட்டுக்கு அருகில் பணியாற்றி வந்த ராஜூ லக்கனன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.  அது மட்டுமின்றி ராஜூ லக்கனன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மஞ்சு கதவைத் திறந்து வைத்துள்ளார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மஞ்சுவை சரமாரியாக தாக்கி கைகளை கட்டி தனியறையில் அடைத்தது, அப்போது மஞ்சு சத்தம்போட்டு உதவி கேட்க முயன்றுள்ளார், அந்நேரத்தில் ராஜு மற்றும் அவரது கூட்டாளிகள் கிட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக படுகொலையில் ஈடுபட்ட ராஜுவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தென் மேற்கு டெல்லியின் டிசிபி அங்கத் பிரதாப் சிங் கூறுகையில்,  இது திட்டமிட்ட ஒரு படுகொலை, கொலை செய்த கும்பல் வீட்டில் இருந்த நகை மற்றும் பணங்களை எடுத்து தப்பியுள்ளது. கொலையாளிகளுக்கு உதவியாக இருந்த மஞ்சு தன்னுடைய கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து வெளியே சென்று அக்கம்பக்கத்தினர் உதவியை நாடியுள்ளார் எனவும், 

உடனே தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மஞ்சுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், இந்த படுகொலை குறித்து அவரது மகன் மோகன் குமாரமங்கலம்துக்கு அலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜூவை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர் என அதிகாரி சிங் தெரிவித்தார். ரங்கராஜன் குமாரமங்கலம் 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேலம் தொகுதி  எம்பியாக வெற்றி பெற்றார், நீதித் துறை அமைச்சராக பணியாற்றினார், பின்னர் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 93 ஆம் ஆண்டு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர் பாஜகவில் இணைந்து, வாஜ்பாய் அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராக பதவி வகித்தார், வாஜ்பாயின் இரண்டு ஆட்சியிலும் அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!