கொரோனாவில் இருந்து மீண்டு வெற்றிகரமாக வீடு திரும்பிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!

By vinoth kumarFirst Published Apr 29, 2021, 5:03 PM IST
Highlights

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் கடிதம் எழுதி, 5 முக்கிய அம்சங்களை வலியுறுத்தியிருந்தார். தடுப்பூசி போடுதலை விரைவுப்படுத்த வேண்டும், தடுப்பூசி போடும் வயதினரைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை வழங்கியிருந்தார். மன்மோகன் சிங் கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்திருந்தார். 

இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டது. பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தடுப்பூசி2 டோஸ்கள் எடுத்துக்கொண்ட அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து, உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று மன்மோகன்சிங் இன்று வீடு திரும்பினார். 

click me!