முன்னாள் எம்பி திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்

Published : Dec 22, 2022, 10:07 AM ISTUpdated : Dec 22, 2022, 10:08 AM IST
முன்னாள் எம்பி திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்

சுருக்கம்

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் மஸ்தான் தஸ்கீர்(66) உடல் நலக்குறைவால் ஊரப்பாக்கத்தில் காலமானார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது மரடைப்பு ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார்.

திமுக நிர்வாகி திடீர் மரணம்

அதிமுகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக டாக்டர் மஸ்தான் 1995 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்,  2001 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் அவருக்கு திமுகவில் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை காரில் ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது டாக்டர். மஸ்தானுக்கு நெஞ்சு வழி ஏற்பட்டுள்ளது.

மாரடைப்பால் மரணம்

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

என் ராசி வித்தியாசமானது.! நான் புகார் கொடுத்தால் அவ்வளவு தான்.! அப்போ ஜெ. இப்போ அண்ணாமலை- ஆர்.எஸ் பாரதி அதிரடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!