முன்னாள் எம்எல்ஏவை பாஜகவில் இருந்து தட்டி தூக்கிய இபிஎஸ்.! அதிர்ச்சியில் அண்ணாமலை..!

By vinoth kumar  |  First Published Jul 7, 2023, 12:14 PM IST

மதுரை சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக  தேர்வு செய்யப்பட்டவர் மாணிக்கம். அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவிலும் இடம்பெற்றிருந்தார். 


அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

மதுரை சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக  தேர்வு செய்யப்பட்டவர் மாணிக்கம். அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவிலும் இடம்பெற்றிருந்தார். பின்னர், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவின் கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தூக்கமின்றி தவிக்கும் அமைச்சர்கள்!செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால் ஸ்டாலின் இருப்பது கோட்டை அல்ல! இபிஎஸ்

இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது   சோழவந்தான் எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  உதவியாளரின் துப்பாக்கியை வாங்கி விஜயகுமார் சுட்டுக்கொண்டது ஏன்.? சந்தேகமாக இருக்கு- சிபிஐ விசாரணை தேவை -இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பல்வேறு கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!