3 முறை கருக்கலைத்து கம்பி எண்ணிய மாஜி அமைச்சர்.. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சொல்லி கதறும் நடிகை.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2021, 5:51 PM IST
Highlights

இந்நிலையில் மாஜி அமைச்சரால் பாதிக்கப்பட்ட நடிகை சாந்தினி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் பாலியல் வழக்கில் 90 நாட்களுக்குள் காவல்துறையினர் விசாரணையை முடித்து உரிய குற்றவாளி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி, ஆனால் வரும் 18 ஆம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைகிறது, 

மூன்று முறை கரு கலைப்பு செய்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என  நடிகை சாந்தினி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். பாலியல் வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தும், இன்னும்  மணிகண்டன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி  நடிகை சாந்தினியுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததுடன், அவரை ஏமாற்றி மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினியால் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி மாஜி அமைச்சர் மணிகண்டன் சென்னை அடையாறு அனைத்து மகளீர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்  ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த மனுவில் காவல்நிலையத்திற்கு தினமும் வந்து கையொப்பம் போட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாஜி அமைச்சரால் பாதிக்கப்பட்ட நடிகை சாந்தினி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் பாலியல் வழக்கில் 90 நாட்களுக்குள் காவல்துறையினர் விசாரணையை முடித்து உரிய குற்றவாளி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி, ஆனால் வரும் 18 ஆம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைகிறது, ஆனால் இதுவரையிலும் மணிகண்டன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, ஆனால் இதேபோன்ற பாலியல் வழக்கில் ராஜகோபாலன் வழக்கு, சிவசங்கர் பாபா வழக்கு என அனைத்து வழக்கிற்கும் உடனடியாக காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.  

ஆனால் தனது  வழக்கு மட்டும் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லாமல் தேங்கி நிற்கிறது என நடிகை சாந்தினி அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். எனவே மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோதமாக 3 முறை கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருண் மற்றும் முன்னாள் அமைச்சர் மருத்துவர் மணிகண்டன் ஆகியோரின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மற்றும் மாநில மெடிக்கல் கவுன்சிலுக்கு சாந்தினி கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 

click me!