சென்னை முதன்மை அமர்வு மன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி 20க்கும் மேற்பட்ட முறை மனுதாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. என்ன காரணம் தெரியுமா?
கைது செய்யப்பட்டபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரினார். சென்னை முதன்மை அமர்வு மன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி 20க்கும் மேற்பட்ட முறை மனுதாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2வது முறையாக ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன என்றார். செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்க துறை தரப்பில் வாதிட்டப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 8 மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால் முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் ராமரை புகழாமல்.. எம்ஜிஆரை புகழ்ந்து வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக?.. கே.சி பழனிசாமி கேள்வி
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 முறை, உயர்நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.