திமுகவினர் விளங்க மாட்டாங்கா? போற போக்கில் அண்ணாமலையை மறைமுக தாக்கி பேசிய செல்லூர் ராஜூ..!

By vinoth kumar  |  First Published Mar 11, 2023, 9:58 AM IST

எத்தனை பெரிய தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஜெயலலிதாவை வீட்டில் வந்து தான் பார்ப்பார்கள். சுனாமி வந்தபோது ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்ட பில்கிளின்டன் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறினார்.


இந்திய அரசியலே ஸ்டாலினை எதிர்பார்க்கிறது என நகைச்சுவையிலும் பெரிய நகைச்சுவையை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்துள்ளார் என செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார். 

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீரைத்துரை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில்;- வீரமற்ற விவேகம் கோழைத்தனம் என்ற முத்துராமலிங்கத்தேவரின் வார்த்தைக்கு ஆத்மார்த்தமாக இருந்தவர் ஜெயலலிதா. எத்தனை பெரிய தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஜெயலலிதாவை வீட்டில் வந்து தான் பார்ப்பார்கள். சுனாமி வந்தபோது ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்ட பில்கிளின்டன் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறினார். அத்தகைய ஆளுமையும், நிர்வாகத்திறமையும் மிக்கவர் ஜெயலலிதா என செல்லூர் ராஜூ கூறினார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஜெயலலிதாவுக்கு பிடித்த தலைவர் திருமாவளவன்..! அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்- செல்லூர் ராஜூ

மேலும், அம்மா என்றால் சும்மா இல்லை. நாங்கள் அம்மா என்று சொன்னால் உணர்வோடு, உணர்ச்சியோடு தான் சொல்வோம். பிரதமர் மோடிக்கு ஜெயலலிதாவை பற்றி நன்றாகவே தெரியும். பாசம் கொண்டவர்கள். மோடியின் பதவியேற்பிற்காக குஜராத் வரை ஜெயலலிதா சென்றார். இங்கே இருப்பவர்களுக்கு வரலாறு தெரியாது. ஜெயலலிதாவை பற்றி யாராவது தவறாக பேசினால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் ஜெயலலிதா பக்தர்கள். மாடியில் இருந்து மக்களை பார்ப்பவர்கள் அதிமுக இல்லை. மக்களோடு இருந்து மக்களை பார்ப்பவர்கள் அதிமுக. 

அனைத்து திறமையும் கொண்ட கலைஞர் முன்பே பட்ஜெட் உரையை கிழித்து எதிர்ப்பு காட்டியவர் ஜெயலலிதா. மடிக்கணினி திட்டத்தை நிறுத்திய திமுக விளங்குவார்களா? அதிமுகவின் எல்லா திட்டங்களுக்கும் திமுக மூடுவிழா நடத்துகிறார்கள். மதுரைக்கும் எடப்பாடிக்கும் ஒரு ராசி உண்டு. மதுரைக்கு வந்தாலே எடப்பாடிக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேர்கிறது என்றார். 

இதையும் படிங்க;-  இப்படி தரம் தாழ்ந்து பேசுவது அழகல்ல.. கவனம்! அமர் பிரசாத் ரெட்டியை எச்சரிக்கும் அதிமுக..!

ஜூபூம்பா என பெட்டியை வைத்து லட்சக்கணக்கில் மனுக்களை வாங்கிவிட்டு பிரச்சனையை தீர்த்துவிட்டோம் என சொல்கிறார் ஸ்டாலின். என்ன பிரச்சனையை தீர்த்தார். எழுதாத பேனாவுக்கு 82 கோடி செலவழிக்க பார்க்கிறார் ஸ்டாலின். மின் கட்டணம் செலுத்த ஆதாரை இணைக்க நம்பர் வாங்கும் போதே ஆபத்து உள்ளது என எச்சரித்தேன். இப்போது 100 யூனிட் மின்சாரத்திற்கும் ஆபத்து வந்துவிட்டது. விஞ்ஞான ரீதியில் மக்களை ஏமாற்ற திமுக சிறப்பாக சிந்திக்கிறார்கள். இதற்காகவே திமுகவுக்கு நோபல்பரிசு கொடுக்கலாம் என ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தார். 

இந்தியாவில் மிகப்பெரிய சிறையில் கனிமொழியையும், ராஜாவையும் அடைத்த போது மானமும், ரோசமும் இருந்திருந்தால் திமுக அரசியலை விட்டே அன்றே விலகி இருக்க வேண்டும். இந்தியாவிற்கே தலைமை தாங்கும் நேரம் வந்துவிட்டது, இந்தியநாடு உங்களை வரவேற்கிறது. இந்திய அரசியலே எதிர்பார்க்கிறது என ஓரே போடு போட்டுவிட்டனர். இந்திய நாட்டிற்கே தலைமை ஏற்க வேண்டும் ஸ்டாலின் என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர் என செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

click me!