தேவர் தங்க கவசம் அதிமுகவிற்கே சொந்தம்..! தனி நபருக்கு இல்லை..! ஓபிஎஸ்க்கு எதிராக சீறிய செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Oct 24, 2022, 2:26 PM IST

பசும்பொன் தேவர் தங்ககவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. பொருளாளர் கையெழுத்திட்டு  எடுத்து செல்லலாம். தங்ககவசம் எந்த தனி  நபருக்கும் சொந்தமானது அல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 


மருது சகோதரர்களுக்கு மரியாதை

மாமன்னர்கள் மருது சகோதரர்களின்,  221 வது நினைவு நாளை முன்னிட்டு, மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டில்  உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடரந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு  வித்திட்டவர்கள் மருதிருவர். அண்ணன் , தம்பி பாசத்திற்கும் நட்பிற்கும் உதாரணமாக தன் உயிரை நீத்த  மருது சகோதரர்களின் நினைவு நாள். அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தி உள்ளோம். அதிமுக சார்பில் மருது சகோதரர்களின்   நினைவிடம் அமைத்தது, அரசு விழாவாக அறிவித்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு என தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

துரோகிகள் ரகசியமாக தான் சந்திப்பார்கள்..! ஓபிஎஸ்சை மீண்டும் சீண்டிய ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவிற்கு அதிகாரம்

பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அப்போது அதிமுக பொருளாளராக யார் இருக்கிறார்களோ,  அவர்களே தங்க கவசத்தை பெற்று ஒப்படைக்க வேண்டும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த. 2017 ஆண்டு இது போன்ற கட்சியில் பிரச்சினை ஏற்பட்ட போது, ராமநாதபுரம்,  மதுரை மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைத்தனர். அது போன்ற நிலை தற்போது இல்லை. தற்போது நிலையில் அதிமுக  பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். பிற வங்கிகளில் அதிமுக வங்கி  கணக்கை தற்போதைய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நடைமுறை படுத்தி வருகிறார்.

ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கும் நாள்..! இருள் விலகி ஒளி பிறக்கட்டும் - ஓபிஎஸ்

நீதிமன்ற உத்தரவு படி செயல்படுவோம்

RBI விதிமுறைகளை பின்பற்றினாலே தற்போதைய பொருளாளருக்கு தான் உரிமை உள்ளது. பசும்பொன் தேவர் தங்ககவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்து செல்லலாம். தங்ககவசம் எந்த தனி  நபருக்கும் சொந்தமானது அல்ல என தெரிவித்தார். தற்போது தேவர் தங்க கசவசம் யார் பெறுவது என்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி நடுநிலையோடு செயல்படுவோம் என கூறினார்.

click me!