முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா? அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்..!

Published : Aug 08, 2021, 03:07 PM IST
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா? அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்..!

சுருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் சேருகிறாரா என் கேள்விக்கு யூகங்களுக்கு பதில் தரமுடியாது என அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக அரசு ஆதாரங்களை தீவிரமாக திரட்டி வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் போலீஸ் விசாரணை நடத்த தடை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் ராஜேந்திர பாலாஜி சிறை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள பாஜவில் இணைவது தான் ஒரே வழி என்பதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை;- தமிழகத்திற்கு பல்வேறு நல்லதுகளை செய்ய பாஜக நினைப்பதாகவும், அதற்கு ஏற்ப நல்லதுகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேகதாது அணை தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது. 

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் சேருகிறாரா என் கேள்விக்கு யூகங்களுக்கு பதில் தரமுடியாது என அண்ணாமலை பதிலளித்துள்ளார். பாஜக சித்தாந்தத்தை நம்பி யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அரசியலில் எந்த கட்சியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட முடியாததால், உரிய மரியாதை கிடைக்காததால் பாஜகவை தேடி வருகின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்