முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் முகாம்.. பாஜகவில் இணைய திட்டமா?

By vinoth kumarFirst Published Aug 8, 2021, 2:37 PM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அதிரடியான கருத்துக்களை பேசிவதாக நினைத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தவர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென டெல்லி சென்றுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அதிரடியான கருத்துக்களை பேசிவதாக நினைத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், பாஜக கொள்கைகளுக்கும், பிரதமர் மோடிக்கு இணக்கமான வகையிலுமே பேசி வந்தார். 

அதேபோல், கடந்த ஆட்சியில் திமுகவையும் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும். ஆட்சிக்கு வந்ததும் முதன் முதலில் விசாரிக்கப்படப்போகும் நபர் ராஜேந்திரபாலாஜி தான் என்று எச்சரித்திருந்தார். சொன்னப்படியே திமுக ஆட்சிக்கு வந்ததும் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வேகம் எடுத்துள்ளது. இதனால், அவர் தலைக்கு மேல் கத்தி தொங்கி வருகிறது. 

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டெல்லி  சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த வழக்கில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ராஜேந்திர பாலாஜி பாஜவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, டெல்லியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டிருப்பதால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. 

click me!