எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்... விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திமுக..!

By vinoth kumarFirst Published Aug 8, 2021, 1:14 PM IST
Highlights

 விவசாயிகள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வகையில் பட்ஜெட் இருக்கும். விவசாயிகள் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஆகவே, கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான அம்சங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு என்ற முடிவில் திமுக அரசு உறுதியாக இருப்பதாக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் வரும் 13ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14ம் தேதி வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், விவசாயத்திற்கென தனியாக பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

அப்போது, செய்தியாளர்களின் மத்தியில் பேசிய  அமைச்சர் பன்னீர்செல்வம்;- வேளாண் பட்ஜெட் குறித்து விவசாய சங்கம், அரசியல் கட்சியின் விவசாய அணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் . விவசாயிகள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வகையில் பட்ஜெட் இருக்கும். விவசாயிகள் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஆகவே, கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான அம்சங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றார். 

மேலும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருப்பதாகவும், அதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.  

click me!