OPS vs EPS: தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் நடைபெறுவதை அராஜகம் என்று கூறுவதா? ஓபிஎஸ்ஐ சீண்டிய வளர்மதி

By Ajmal KhanFirst Published Jun 22, 2022, 11:57 AM IST
Highlights

ஒற்றை தலைமை விவகாரம் அனைத்து அதிமுக நிர்வாகிகள் விருப்பத்தின் பேரில் நடைபெறுவதை எப்படி அராஜகம் என கூற முடியும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

அதிமுகவில் அராஜகம்-ஓபிஎஸ்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென கூடி ஒப்பாரி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தொண்டர் ஒருவர்  பெட்ரோலை உடல் மேல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் அந்த நபரை தடுத்து வெளியேற்றனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என கூறியிருந்தார்.

அராஜகம் இல்லை அமைதி தான் உள்ளது

இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த வளர்மதி,  பொதுக்குழு உறுப்பினர்கள்,செயற்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் கையொப்பமிட்டு தான் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இப்படி உள்ளநிலையில் எப்படி ஓ.பி.எஸ் ஐ ஓரம்கட்ட முடியும் என கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியை பார்க்க வருபவர்கள் வருபவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.  இது எப்படி அராஜக போக்கு ஆகும், எந்தவித ஆராஜகம்  இல்லாமல் அமைதியான முறையில் தான் நடைபெறுகிறது. 1972 க்கு பிறகு தொண்டர்கள் மத்தியில் மிக பெரிய எழுச்சி தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தவர்,  ஓ.பி.எஸ் சின் செயல்பாடுகளால் தொண்டர்களுக்கு கவலை அளிப்பதாக தெரிவித்தார். கட்சிக்கு இரண்டு ட்ராக் இருந்தால் சரியாக இருக்காது, ஒரே டராக்கில் கட்சி பயணிக்க வேண்டும் என தெரிவித்தவர் 24 மணிநேரத்தில் தெரியவரும் யார் அதிமுக பொதுச்செயலாளர் என்பது என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

OPS vs EPS : இபிஎஸ்க்கு பூங்கொத்து கொடுக்கும் ஓபிஎஸ்..! பொதுக்குழு வளாகத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

 

click me!