எனது அருமை நண்பர் கேப்டன்.. விரைவில் நலம் பெற வேண்டி முதலமைச்சர் வாழ்த்து..

Published : Jun 22, 2022, 11:40 AM ISTUpdated : Jun 22, 2022, 11:41 AM IST
 எனது அருமை நண்பர் கேப்டன்.. விரைவில் நலம் பெற வேண்டி முதலமைச்சர் வாழ்த்து..

சுருக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரப்பட்டது. மேலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் அண்மையில் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாதிப்பு, கால் வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பிய அவர், இரு தினங்களுக்கு முன்பாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க:தேர்தல் ஆணையத்தை நாட ஓபிஎஸ் திட்டமா? வைத்தியலிங்கம் பரபரப்பு தகவல்..!

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், வலதுகாலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், வலதுகால் விரல்களை அகற்ற பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து திங்கள்கிழமை அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு விரல் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” எனது அருமை நண்பர் கேப்டன்  விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.

மேலும் படிக்க: அரசு கலை கல்லூரிகளில் சேர்க்கை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. உயர்கல்வித்துறை புது அறிவிப்பு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!