முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அட்மிட்.. அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.

Published : Aug 26, 2021, 11:21 AM IST
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அட்மிட்.. அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.

சுருக்கம்

பின்னர் வேறு வழியில்லாமல் அல்லாடி வந்த அவர், ஓபிஎஸ் தொடங்கிய தர்ம யுத்தத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட தொடங்கினார். ஆனால் அந்த இரண்டு அணிகளும் ஒன்றாகிவிட்டதால் அதற்குப் பின்னர் அவரால் தலைதூக்க முடியாமல் போனது.

முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய புள்ளியுமான நத்தம் விஸ்வநாதன் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக பதவிகளைப் பெற்று உயர்ந்தவர் நத்தம் விஸ்வநாதன்.  ஆரம்பத்தில் கட்சியில் பெரிய செல்வாக்கு இல்லாமல் இருந்த அவருக்கு காலப்போக்கில் சூழ்நிலைகள் மாறியது. ஒரு கட்டத்தில் ஜெயலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக மாறினார். 

இவர் கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்து முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று அதில் முன்னாள் மின்சார துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்பில் இருந்த அப்போதைய ஐவர் அணியில் ஒருவராக நத்தம் விஸ்வநாதன் கம்பீரமாக வலம் வந்தார். பின்னர் பல்வேறு அரசியல் காரணங்களால் ஜெயலிதாவின் வெறுப்பை சம்பாதித்தார் அவர்,  திண்டுக்கல் நத்தம் தொகுதியை அசைக்க முடியாத கோட்டையாகத் உருவாக்கி வைத்திருந்த அவரை, அவர் வெற்றி பெறவே முடியாது என தெரிந்தும் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தார் செல்லி ஜெயலலிதா. அந்த தேர்தலில் அவர் மண்ணைக் கவ்வினார். அப்போதே நத்தம் விசுவநாதன் அரசியல் பயணத்திற்கு அஸ்தமனத்தை எழுதி முடித்தார் ஜெயலலிதா என்று அது கருதப்பட்டது. 

பின்னர் வேறு வழியில்லாமல் அல்லாடி வந்த அவர், ஓபிஎஸ் தொடங்கிய தர்ம யுத்தத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட தொடங்கினார். ஆனால் அந்த இரண்டு அணிகளும் ஒன்றாகிவிட்டதால் அதற்குப் பின்னர் அவரால் தலைதூக்க முடியாமல் போனது. பல போராட்டங்களுக்கு பின்னர் அவர் தற்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் நத்தம் தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிரத்து 900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் அவர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் திடீர் வயிற்றுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, ஆனாலும் இது அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!